இந்தோனேசியாவில் தொற்று உச்சக் கட்டத்தைக் கடந்தது

இந்தோனேசியாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உச்சத்தைக் கடந்துவிட்டதாக அந்நாட்டு கொவிட்-19 பணிக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 24ஆம் திகதிக்குப் பின்னர் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்துவருவதாக அதிகாரிகள் கூறினர்.

இந்தோனேசியாவில் மிக அதிகத் தொற்றுச் சம்பவங்கள் கடந்த மாதம் 15ஆம் திகதி பதிவாகின.

அன்று தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57இ000ஆக இருந்தது.

இருப்பினும்இ குறிப்பிட்ட சில மாநிலங்களில் புதிய தொற்றுச் சம்பவங்கள் அதிக அளவில் பதிவாகிவருவதாக அதிகாரிகள் எச்சரித்தனர். வடக்குஇ மேற்கு சுமத்ராஇ கிழக்குஇ தெற்கு கலிமந்தான்இ ரியாவ் ஆகிய வட்டாரங்களில் ஜூலை 4இலிருந்து இம்மாதம் 8ஆம் திகதி வரை 10இ000க்கும் அதிகமானோரிடம் தொற்று உறுதியானது.

இந்தோனேசியாவில் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 113இ000க்கும் அதிகம். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடந்த மாதம் உயிரிழந்துள்ளனர்.

 

Sat, 08/14/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை