கொழும்பின் சில பகுதிகளில் 9 மணி நேர நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 9 மணி நேர நீர் வெட்டு-9 Hour Water Cut in Some Areas in Colombo-August 14

நாளை (14) காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கொழும்பின் சில பகுதிகளில் 9 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 12 (புதுக்கடை), கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை, கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்), கொழும்பு 15 (மோதறை, மட்டக்குளி) ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

ஒருகொடவத்த - அம்பத்தல வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் வீதி திருத்தப் பணி காரணமாக, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து எலி-ஹவுஸ் நீர்த்தேக்கத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதால் இந்நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக, சபை விடுத்துள்ள அறித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fri, 08/13/2021 - 15:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை