முல்லைத்தீவில் இருந்து மடுமாதாவிற்கு பாத யாத்திரை

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக மடுமாத ஆலயத்தின் ஆவணி திருவிழா மட்டுப்படுத்தப்பட்டுள்ள மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த பக்தர்களுடன் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி மடு அன்னையின் ஆவணி திருவிழா நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் உள்ள மாவட்டங்களில் இருந்து மக்கள் பாதாயாத்திரையாக செல்கின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு,இரணைப்பாலை பகுதிகளில் இருந்து கட்டம் கட்டமாக மக்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவுசெய்ய நடைபயணம் தேற்கொண்டு வருகின்றார்கள். ஆண்டு தோறும் 15 ஆம் திகதி மடு அன்னையின் திருவிழாவினை முடித்துக்கொண்டு திரும்பும் பக்தர்கள் இம்முறை நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா காரணமாக 13 ஆம் திகதிக்கு பின்னர் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் அதற்கு முன்னர் நேர்த்திக்கடன்களை நிறைவுசெய்ய கட்டம் கட்டமாக நடைபயணம் மேற்கொண்டுள்ளதாக பக்த்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பக்த்தர்கள் முல்லைத்தீவின் எல்லை கிராம பாதையான நெட்டாங்கண்டல், பாலம்பிட்டி சென்று அங்கிருந்து மடுவிற்கு செல்வதாக தெரிவித்துள்ளார்கள்.

(புதுக்குடியிருப்பு விசேட நிரூபர்)

 
Fri, 08/13/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை