கொரோனாவால் கருவிலிருந்த 5 மாத குழந்தை பலி

கம்பளையில் சோகம்

கொரோனா வைரஸ் தொற்றால் 5 மாத குழந்தையொன்று தாயின் கருவறைக்குள்ளேயே உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.

கம்பளை நகர் பகுதியைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணி பெண்ணொருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், குழந்தை கருவறையிலேயே உயிரிழந்துள்ளது. அதன்பின்னர் சத்திரசிகிச்சைமூலம் குழந்தை வெளியில் எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கும் வைரஸ் தொற்று பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பளையிலுள்ள தகனசாலையில் சிசுவின் சடலம் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

கம்பளை நிருபர்

 
Fri, 08/27/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை