4,100 மெ.தொன் சீனி மீட்கப்பட்டது

வத்தளை கெரவலபிட்டியவில் சம்பவம்

நுகர்வோர் அதிகாரசபை அதிரடி நடவடிக்கை

நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மேலும் 4,100 மெற்றிக் தொன் சீனி மீட்கப்பட்டுள்ளது.

வத்தளை கெரவலப்பிட்டி பகுதியில் மறைவாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே மேற்படி 4,500 மெட்ரிக் தொன் சீனி மீட்கப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று காலை அப்பகுதியில் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சீனி மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த களஞ்சியசாலை நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தையில் சீனியின் விலை வெகுவாக அதிகரித்துச் செல்லும் நிலையில் சீனி இறக்குமதியாளர்கள் சீனிக்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் சீனியைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனை முறியடிக்க தொடர்ச்சியான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.(ஸ)

 

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 08/31/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை