ஹெய்டி நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 2000ஐ நெருங்கியது

ஹெய்டியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 500ஆல் அதிகரித்து 1,941 ஆக உயர்ந்துள்ளது.

7.2 ரிச்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுமார் 10,000 பேர் காயமடைந்திருப்பதோடு பலரும் தொடர்ந்து காணாமல்போன நிலையில் உள்ளனர்.

இங்கு ஏற்பட்டிருக்கும் புயல் மழையால் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்த நிலையில் சிறிய அளவில் தொடரும் பின் அதிர்வுகள் மற்றும் புயல் காரணமாக சேதமடைந்த கட்டடங்களுக்கு மீண்டும் திரும்புவதற்கு பலரும் அச்சத்தில் உள்ளனர்.

தென்மேற்கு ஹெய்டியில் நில நடுக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக லெ கெயஸ் நகரைச் சூழ பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

‘நேற்று மாலை (செவ்வாய்க்கிழமை) தேவாலயம் ஒன்றுக்கு அருகில் அடைக்கலம் பெற்றேன். ஆனால் பூமி மீண்டும் அதிர ஆரம்பித்தபோது நான் இங்கே ஓடி வந்துவிட்டேன்’ என்று லெ கெயஸ் நகர குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 08/19/2021 - 11:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை