பெண்கள் புர்கா அணிவது கட்டாயமில்லை: தலிபான்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் முகத்தையும் உடலையும் மறைக்கும் புர்கா எனும் முழுமையான வெளியாடை அணிவது கட்டாயமாக்கப்படாது என்று தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

புர்காவைத் தவிர்த்து, பெண்கள் ஹிஜாப் எனும் முக்காடும் அணியலாம் என்று, தலிபான் அமைப்பின் அரசியல் அலுவலகப் பேச்சாளர் கூறினார்.

1996இலிருந்து 5 ஆண்டுக்கு தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது, பெண்கள் புர்கா எனும் முழுமையான வெளியாடை அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

பெண்கள் கல்வி கற்க, பயணம் மேற்கொள்ள, வேலை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

இப்போது தலிபான், மீண்டும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர், பெண்களின் உரிமை குறித்து அக்கறை எழுந்துள்ளது.

இருப்பினும், பெண்கள் கல்வி கற்கமுடியும் என்றும், அவர்கள் ஆரம்ப பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகம் வரை சென்று பயில முடியும் என்றும் அமைப்பின் பேச்சாளர் சொன்னார்.

தலிபான்கள் கைப்பற்றியுள்ள வட்டாரங்களில் ஆயிரக்கணக்கான பாடசாலைகள் தொடர்ந்து செயல்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

Thu, 08/19/2021 - 13:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை