கொவிட்-19 தொற்றுக்குள்ளாகும் சிறார்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை வழங்க தீர்மானம்

இரண்டு வயதுக்கு மேற்பட்ட கொவிட்- 19 தொற்றுக்குள்ளாகும் சிறுவர், சிறுமியருக்கு தமது வீடுகளிலேயே தங்க வைத்து சிகிச்சை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் டொக்டர் ஷன்ன டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நோய் அறிகுறிகள் தென்படாத மற்றும் சிறு நோய் அறிகுறிகள் தென்படுகின்ற சிறுவர், சிறுமிகளை வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு வைத்தியர்கள் கோரியுள்ளனர்.

தொற்றா நோய் மற்றும் நீண்ட கால நோய்களுக்காக சிகிச்சைகளை பெறாத சிறுவர், சிறுமியர்களுக்கே இவ்வாறு வீடுகளில் சிகிச்சை வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுக்குள்ளாகும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை, வெகுவாக அதிகரித்துள்ளதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளில் சிகிச்சை பெறும் சிறுவர், சிறுமியர்களை அவதானித்துக்கொள்ள வேண்டியது, வீட்டிலுள்ள மூத்தவர்களின் பொறுப்பு என்பதுடன், தொலைபேசியூடாக வழங்கப்படும் ஆலோசனைகளுக்கமைய சிகிச்சைகளை வழங்கும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Thu, 08/12/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை