தடுப்பூசி திட்டத்திற்கு WHO ஒத்துழைக்கும்

இலங்கை பிரதிநிதி அலகா சிங் உறுதி

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, முன்வைத்துள்ள கொவிட் 19 தடுப்பூசி திட்டம் நடைமுறை சாத்தியமானதென உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அலகா சிங் (Alaka Singh) தெரிவித்துள்ளார்.  இலங்கை அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் இலக்கை அடைவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும் அலகா சிங் குறிப்பிட்டார்.

கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை கண்காணித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்திலுள்ளவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றும் திட்டம் விஹார மகாதேவி பூங்கா மத்திய நிலையத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. காலை 8.30-மணியிலிருந்து பிற்பகல் 4.30 மணிவரை விஹாரமகாதேவி பூங்காவில் தடுப்பூசி ஏற்றப்படுவதாக இராணுவம் தெரிவித்தது.

மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒருவரும் இந்த மத்திய நிலையத்தில் சினோபாம் தடுப்பூசியின் முதல் டோஸை ஏற்றிக்கொள்ள முடியும்.

Sat, 07/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை