தோற்கடிப்பதில் அரசாங்கம் உறுதி

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் தோற்கடிப்போம். அரசாங்கத்துக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. பிரச்சினை  உள்ளது என்று கூறுபவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவை கிடையாதென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை மேற்பார்வை செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப் பட்டுள்ள காரணிகள் அடிப்படையற்றவை.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் தோற்கடிப்போம் என்றார்.

 

Thu, 07/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை