வாகன விபத்துக்களில் ஒரே நாளில் 10 பேர் பலி

மோ.சைக்கிள் விபத்தில் மாத்திரம் 7 பேர்

 

நாட்டில் 13 ஆம் திகதி மாத்திரம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் 07 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். ஏனைய மூன்று பேரும் பாதசாரிகளென அவர் தெரிவித்தார்.

வாகன விபத்துக்களில் அதிகரிப்பை காண முடிவதாக தெரிவித்த அவர், இந்நாட்டு வீதி கட்டமைப்ப்புக்கு அமைய இது மிகவும் அதிகம் எனவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் சுட்டிக்காட்டினார். கடந்த 2020 ஆம் ஆண்டில் 2,144 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ளதுடன் 2019 ஆம் ஆண்டு 2,839 பேர் உயரிழந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில் இதுவரை 1,266 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ள நிலையில், 07 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

Thu, 07/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை