சின்ஜியாங் மாநிலத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சீனாவின் சின்ஜியாங் மாநிலத்துடன் விநியோகமும், முதலீட்டுத் தொடர்புகளும் வைத்திருக்கும் நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

விநியோகத்தையும், முதலீடுகளையும் கைவிடாவிட்டால், அமெரிக்கச் சட்டங்களை மீறும் அபாயத்தை எதிர்நோக்கக்கூடும் என்று வாஷிங்டன் குறிப்பிட்டது.

சீன அரசாங்கம் சின்ஜியாங் வட்டாரத்தில் இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை நடத்துவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு குற்றஞ்சாட்டி வருகிறது.

அதன் தொடர்பில், மேலும் ஆதாரங்களைப் பெற்றிருப்பதாகவும் அது கூறியது. ஆனால், எல்லாக் குற்றச்சாட்டுகளையும் பீஜீங் மறுத்துள்ளது.

இந்நிலையில்,ஹாங்காங்கில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் சந்திக்க நேரும் அபாயங்கள் பற்றி விரைவில் எச்சரிக்கை விடுக்கப்படலாம் என்று The Financial Times நாளேடு தெரிவித்துள்ளது.

Thu, 07/15/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை