கிண்ணியாவில் அரச காணியை சுவீகரிக்க முயன்ற மூவர் கைது

கிண்ணியா குரங்கு பாஞ்சான் பகுதியில் காணி சுவீகரிப்பில் ஈடுபட்ட குற்றச் சாட்டின் பேரில் புதன்கிழமை (07) மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் காட்டு மரங்களை வெட்டி துப்புரவு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சூரங்கல் இராணுவ முகாமுக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றில் பேரில் இராணுவத்தினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த 60 மற்றும் 44, 42 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர் இவர்களை உடனடியாக வனபரிபாலன அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.

இவர்கள் தற்போது கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Fri, 07/09/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை