வலுவிழக்க செய்ய ஹிருணிக்கா மனு

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலையான துமிந்த சில்வாவின் விடுதலை உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, உயர் நீதிமன்றத்தில் நேற்று (21) மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட 04 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கின் 11 ஆவது குற்றவாளி , மரணதண்டனை கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்து, ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சார்பாக நீதி அமைச்சர், சட்ட மாஅதிபர் மற்றும் துமிந்த சில்வா ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

Thu, 07/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை