குவீன்ஸ்லந்து கரைக்கு அப்பால் சீன உளவுக் கப்பல்

குவீன்ஸ்லந்து கரைக்கு அப்பால், சீன உளவுக் கப்பலை நுணுக்கமாய்க் கண்காணித்து வருவதாக அவுஸ்திரேலியத் தற்காப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ABC செய்தி நிறுவனம் அது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவும் இவ்வாரம், பெரிய அளவில் இராணுவப் பயிற்சிகளை நடத்தவிருக்கின்றன. ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் Talisman Sabre போர்ப் பயிற்சிகளைச் சீனக் கப்பல் கண்காணிக்கக்கூடும்.

ஒலி சமிக்ஞைகளைச் சேகரிக்கவும் இடைமறிக்கவும், உளவுக் கப்பலில் நவீனத் தொடர்புச் சாதனங்கள் இருப்பதாகத் தெரிகிறது. சீன உளவுக் கப்பல், வட்டாரத்துக்குள் வரும் என்று எதிர்பார்த்துத் தயாராய் இருந்ததாக அவுஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சு கூறியது.

முன்னர் நடத்தப்பட்ட இராணுவப் பயிற்சிகளின் போது உளவுக் கப்பல்கள் இடையூறு விளைவித்ததில்லை என்றும் அது குறிப்பிட்டது. இவ்வாண்டு, Talisman Sabre போர்ப் பயிற்சிகளில் பிரிட்டன், ஜப்பான் ஆகிய நாடுகளின் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். நோய்ப்பரவல் காரணமாக, பயிற்சிகளில் பங்குபெறுவோர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

Thu, 07/15/2021 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை