மலேசியப் பிரதமராக முஹிதீன் தொடர அந்நாட்டு அமைச்சர்கள் முழு ஆதரவு

மலேசியப் பிரதமராக முஹிதீன் யாசின் (Muhyiddin Yassin) தொடர்ந்து பொறுப்பு வகிக்க, அங்குள்ள அமைச்சர்கள் ஒருமனதாய் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முஹிதீன் பிரதமர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று அம்னோ கட்சி ஒரு வாரத்திற்கு முன்பு கோரிக்கை விடுத்தது.

எல்லாத் தரப்பினரின் அக்கறைகளையும் கருத்தில் கொண்டு பிரதமருக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க முடிவெடுக்கப்பட்டது என்று அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.

மக்களின் நலனுக்கும் நாட்டின் செழிப்புக்கும், தேசிய மீட்சித் திட்டத்தை வெற்றியடையச் செய்வது அரசாங்கத்தின் தற்போதைய குறிக்கோள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கிருமிப்பரவல் சூழலிலிருந்து நாட்டை மீட்டு வருவதும் இலக்கு என்று மலேசிய அமைச்சர்கள் கூறினர்.

Fri, 07/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை