அபாயத்தில் பலூச்சி சிறுகைத்தொழில்துறை

பலுசிஸ்தானின் சிறுகைத்தொழில்துறை பாகிஸ்தானிய அரசு அதிகாரிகளின் அசமந்த போக்கினால் பெரும் பாதிப்பு அடைந்திருப்பதாகவும் இந்நிலை தொடருமானால் சிறு கைத்தொழில்துறை மூடப்படும் நிலையை அடையுமெனவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நஸார் கியானி என்பவர் 'புரொன்டியர் போஸ்ட்' என்ற பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், சிறு கைத்தொழில்களுக்கு பாகிஸ்தானில் சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம் என்றும் பலூச்சியில் இயங்கும் சிறுகைத்தொழில்களுக்கு அதிகாரிகளின் அசமந்தம் காரணமாக இச்சலுகைகள் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குவேட்டா நகரின் தொழில்பேட்டையில் இயங்கும் சிறுகைத்தொழிற்சாலைகள் சலுகைகள் வழங்கப்படாததால் மூடப்படும் நிலைக்கு ஆளாகி இருப்பதாகவும் சமீப காலமாக எந்தப் புதிய தொழிற்சாலையும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் இவர் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதோடு முதலீடுகள் தொடர்பாக அரசாங்கம் அசிரத்தையுடன் நடந்துகொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Mon, 07/12/2021 - 11:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை