சுதந்திர கட்சியின் 75 உள்ளூ. சபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கட்சியின் நியதிகளுக்கு முரணாக செயற்பட்ட 75-க்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சியின் அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றாமை மற்றும் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்காமை உள்ளிட்ட கட்சியின் நியதிகளை மீறி செயற்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் காரணமாகவே அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 10 பேருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலின் போது மாத்தளை மாவட்ட வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேரா வுக்கு ஆதரவளிக்காமல் வேறு ஒரு கட்சி வேட்பாளருக்கு ஆதரவளித்தமை தொடர்பிலேயே அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 07/21/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை