கடலில் மிதந்து வந்த 5 கோடி ரூபா கஞ்சா

நீர்கொழும்பில் 500 கிலோ பொலிஸாரால் மீட்பு

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

நீர்கொழும்பு ஏத்துக்கால , செனவிரத்ன மாவத்தை கடற்கரையில், கடலில் மிதந்து வந்த 500 கிலோ கேரளா கஞ்சா பொதிகள் நேற்று (21) அதிகாலை நீர்கொழும்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி சுமார் ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிகமானதாகுமென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவிலிருந்து கடல் வழியே கடத்தி வரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இந்த கேரளா கஞ்சா பொதிகள் கடத்தல்காரர்கள் கடலில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. கேரள கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் சாக்குகளில்  வைக்கப்பட்டிருந்தது.

இரவு நேர நடமாடும் பொலிஸ் சேவையில் ஈடுபட்ட (Mobile) பொலிஸாருக்கு பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கிய கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்னர்.

 

 நீர்கொழும்பு தினகரன் நிருபர்

Thu, 07/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை