எனது குழந்தையை யாரோ தீ வைத்து கொன்றுவிட்டனர்

சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் தெரிவிப்பு

சிறிய தீயைக் கண்டாலேயே பயப்படும் எமது மகள் தானாகவே தீ மூட்டிக் கொள்ளும் அளவுக்கு தைரியமானவரல்ல. அவருக்கு யாரேனும் தீ வைத்திருப்பார்களென நூறு வீதம் சந்தேகிப்பதாக தீக் காயங்களுடன் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி யின் பெற்றோர் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டு தீக் காயங்களுடன் மரணமான சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் கண்டியில் (20) ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

சிறுமி ஹிஷாலினியில் தந்தை ஜெயராஜ் ஜூட்குமார் மற்றும் தாய் ஆர்.ரஞ்சனி ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தங்களின் மகள் தொலைபேசியில் தம்டமுடன் பேசும் போது,தன்னை அங்குள்ளவர்கள் தும்புத் தடியால் தாக்குவதாகவும் தன்னால் அங்கு தொடர்ந்தும் இருக்க முடியாது என்பதால் உடனடியாக வந்து அழைத்துச் செல்லுமாறும் ஹிஷாலினி கூறியதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தொழிலுக்குச் செல்லுமாறு நாம் அவரை பலவந்தப்படுத்தவில்லை. அவர் விரும்பியே சென்றார்.

ஆண்களைப் பார்த்தால் விலகிச் செல்லும் பெண் பிள்ளை அவர். எனது மகள் சிறிய தீயைக் கண்டால் கூட அஞ்சுபவர். நாம் வீட்டில் தீ மூட்டினால் கூட அருகில் இருக்க மாட்டார்.

இவ்வாறு அச்சப்படுவபவர் எவ்வாறு தனக்கு தானே தீ மூட்டிக் கொள்வார் என்பதில் எமக்கு பாரிய சந்தேகம் நிலவுகிறது. அவர் தீ மூட்டிக் கொண்டிருக்க மாட்டார். யாரேனும் ஒருவரால்தான் தீ மூட்டப்பட்டிருக்கும்.

யாரோ ஒருவர் அவருக்கு தீ வைத்திருக்கிறார் என்று நூற்றுக்கு நூறுவீதம் நாம் சந்தேகிக்கிறோம் என்றனர்.

 

Thu, 07/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை