மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேலும் 50,000 தடுப்பூசிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரம் சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.அச்சுதன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாம் கட்ட கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் சுமார் 28 நிலையங்களில் கொவிட் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

(வெல்லாவெளி தினகரன், புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்)

Fri, 07/09/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை