ஓகஸ்ட் முதல் வாரத்தில் மேலும் 4 மில்லியன் டோஸ் Sinopharm கொள்வனவு

ஓகஸ்ட் முதல் வாரத்தில் மேலும் 4 மில்லியன் டோஸ் Sinopharm கொள்வனவு-4 million More Sinopharm will be Arrived in August First Week

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் 4 மில்லியன் டோஸ் Sinopharm கொவிட் தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கம் பெறவுள்ளதாக, பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

தூதரகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் தடுப்பூசிகள் ஒரே தொகையாக கிடைக்குமெனவும், இவ்வாறு இலங்கைக்கு கிடைக்கும் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு ஒரே தடவையில் கிடைக்கும் மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பூசிகள் தொகையாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 04 - 08 இற்குள் அதனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் புதிதாக பெறப்படும் 4 மில்லியன் தடுப்பூசிகளுடன், சீனாவிலிருந்து இலங்கையினால் கொள்வனவு செய்யப்படும் Sinopharm தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 12 மில்லியனாக (ஒரு கோடி 20 இலட்சம்) அதிகரிக்கும் என்பதுடன், சீனா அன்பளிப்பாக வழங்கிய 2.7 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளுடன், சீனாவிலிருந்து இலங்கையால் பெறப்படும் Sinopharm தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 14.7 மில்லியன் டோஸ்களாக அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட்-19 இற்கு எதிரான தடுப்பூசியேற்றும் நடவடிக்கையில் நேற்றையதினம் (27) வரையான நிலை வருமாறு...

Wed, 07/28/2021 - 11:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை