ஹிசாலினியின் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு

சிறுமி ஹிசாலினியின் உடல் புதைக்கப்பட்டுள்ள மயானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுயினர் ரிசாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிந்த டயகம தோட்டத்தை சேர்ந்த சிறுமி ஹிசாலினி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

சிறுமியின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதுடன் சிறுமியின் பிரேத பரிசோதனையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.இதனையடுத்து மலையகம் உள்ளிட்ட ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்பாட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

இந்நிலையில் டயகம மேற்கு மூன்றாம் பிரிவு தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து சிறுமின் உடல் புதைக்கப்பட்டுள்ள மயானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர், ஹற்றன் சுழற்சி நிருபர்

 
Wed, 07/28/2021 - 11:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை