முப்பது வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் ஏற்றியபின் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு

தடுப்பூசி ஏற்றும் திட்டம் குறித்து அமைச்சர் சன்ன

 

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னர் 12 வயதுக்கு அதிகமானவர்களுக்கு தடுப்பூசியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு போதியளவு நிதி இல்லையென்பதால் தான் தான் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரம் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதாக ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இது மிகவும் பொய்யானதொரு குற்றச்சாட்டாகும். முதல்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. பின்னர் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட நடவடிக்கையெடுக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டப் பின்னர் 12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஒரு நேர்த்தியான முறையில் தடுப்பூசி வேலைத்திட்டத்தை வழங்க வேண்டுமென்பதற்காகவே குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வயது முதிந்தவர்கள், முன்னிலை சுகாதார ஊழியர்கள், நோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி திட்;டத்தில் முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்கா, ஐரோப்பா அல்லது எந்தவொரு நாட்டிலும் இதுதான் பின்பற்றப்படும் சாதாரண நடைமுறையாகும். உலக சுகாதார ஸ்தாபனமும் இதற்கான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறுவதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. சில நோய்களுக்கு தடுப்பூசியை வழங்கி குணப்படுத்த முடியும். சில நோய்களுக்கு தடுப்பூசிகளை வழங்கியும் குணப்படுத்த முடியாது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்த தடுப்பூசியை கொடுத்தாலும் குணப்படுத்த முடியாது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 07/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை