PCR பரிசோதனை முடிவுகளிலேயே தங்கியுள்ளது

தற்போது அமுலிலுள்ள பயணத் தடை நிறைவடையும் 21 ஆம் திகதியின் பின்னர் நாட்டை திறப்பதா? என்பது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கிடைக்கவுள்ள பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்படுமென சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

தற்போது தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு 10 நாட்களின் பின்னர் பிசிஆர் பரிசோதனை எடுக்கப்படுவதில்லை யெனவும் 14 நாட்களின் பின்னர் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் எழுமாறான பிசிஆர் பரிசோதனைகள் ஊடாக நாட்டின் நிலைமையை அவதானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Fri, 06/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை