சீன அணு உலையில் கதிரியக்க கசிவு

பிரெஞ்சு நிறுவனம் எச்சரிக்கை

சீன அணு உலை ஒன்றில் கதிரியக்கக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் கட்டுப்படுத்தப்படாத பட்சத்தில் பெரும் அணு விபத்தாக முடியலாம் என்றும் அமெரிக்க உளவுத் தகவல்களை மேற்கோள்காட்டி சி.என்.என். செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவின் குவாங்டொங் மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்திருக்கும் தைஷான் அணு உலையிலேயே இக் கதிரியக்க வாயு கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், இம் மாத இறுதியில் அவதானிக்கப்பட்ட இக் கசிவு, கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வந்துள்ள போதிலும் இன்னும் ஆபத்தான கட்டத்தை எட்டவில்லை என்றும் இச்செய்தி தெரிவித்துள்ளது.

இந்த அணு உலையின் கூட்டு உரிமையாளரான பிரெஞ்சு பிரேம்எடொம் நிறுவனமே இக் கசிவு தொடர்பாக வொஷிங்டனுக்கு முதல் தகவலைத் தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது. இக்கசிவு தொடருமானால் அப்பகுதியில் மோசமான கதிரியக்க விளைவுகள் ஏற்படும் என்றும் எனவே உலையை மூடிவிடுமாறும் இந்நிறுவனம் சீன அதிகாரிகளுக்கு விடுத்த அறிவுறுத்தல்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் பிரெஞ்சு நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் உலையை மூடுவதற்கு பதிலாக, அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பு அளவை சீன அணு உலை நிர்வாகம் அதிகரித்திருப்பதாக பிரேம்எடொப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அணுக்கள் பிளக்கப்படும் போது பக்கவிளைவாக கதிரியக்கம் வெளிப்படும். இது சூழலில் கலக்கும்போது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

Fri, 06/18/2021 - 08:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை