சீனாவிலிருந்து குப்பைகளை அரசு இறக்குமதி செய்கிறதா?

- வதந்தி, பொய்ப்பிரசாரம் என்கிறது அரசு

இலங்கை, சீனக் குப்பைகளை கொட்டும் இடமல்லவென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் நேற்று (01)அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில், இலங்கை சீனாவிலிருந்து குப்பைகளை இறக்குமதி செய்கிறதென்று கூறுவது ‘நகைப்புக்குரியது’ இதுபோன்ற கூற்றுக்கள் வெறும் வதந்திகளென்றும் அவர் தெரிவித்தார்.  

அத்துடன் எந்தவொரு நாட்டுக்கும் விற்கப்படும் சினோபார்ம் தடுப்பூசியின் விலையை சீனா தீர்மானிக்க முடியமென்றும் அவர் தெரிவித்தார்.சினோபார்ம் தடுப்பூசி இலங்கைக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறதா? என ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

தடுப்பூசியின் விலை குறித்து இலங்கை அரசு முடிவு செய்யவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ முடியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அல்லது சீன அரசு மட்டுமே இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார். இருப்பினும் இந்த தடுப்பூசி ஏனைய நாடுகளுக்கு வழங்கப்பட்ட விலையைவிட குறைந்த விலையில் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளதென்றும் அவர் கூறினார்.  

Wed, 06/02/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை