கொவிட் வைரஸ் தோற்றம் தொடர்பாக அறிக்கை ஏழு நாட்களில் சமர்ப்பிக்குமாறு ஜோ பைடன் உத்தரவு

கொவிட் 19 வைரஸ் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பது தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் போது தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை ஆய்வுசெய்து ஒரு வார காலத்தில் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமெரிக்க உளவுத்துறையின் ஒரு அங்கமான இஸட் பிரிவைச் சேர்ந்த லோரன்ஸ் லிவர்மோர் மேற்படி அறிக்கையை தயாரித்திருந்தார்.

கொவிட் வைரஸ் ஒரு விலங்கில் இருந்து மனிதனைத் தொற்றியதா அல்லது ஆய்வுகூடமொன்றில் இருந்து கசிந்ததால் மனிதனைப் பீடித்ததா என்பதை ஆராயும் வகையிலேயே இந்த ஆய்வறிக்கை தயரிக்கப்பட்டிருந்ததாக இப் பாதுகாக்கப்பட்ட ஆவணத்துடன் தொடர்புபட்ட வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சார்ஸ், கொவிட்- 2 வைரஸ் தொடர்பான விடங்களில் ஆய்வாளர் லோரன்ஸ் லிவர்மோர் நிபுணத்துவம் பெற்றவர்.

வைரசுகளைப் பிரித்து ஆய்வுசெய்வதன் மூலம் அவை எவ்வாறு உருவானது என்பதையும் அவை மனிதரிடம் எப்படித் தொற்ற முடிந்தது போன்ற விவரங்களையும் அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Tue, 06/15/2021 - 07:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை