ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்-SJB MP's Protest Against Fuel Price Hike

எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தினுள் பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வு, பசளை தட்டுப்பாடு, பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்கள், 'தென் செபத' (இப்போது சந்தோசமா) உள்ளிட்ட வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தி அவர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில், பதாகைகளுடன் சபை நடுவில் வந்து அமர்ந்து தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Wed, 06/23/2021 - 11:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை