ஜம்மு காஷ்மீருக்கு 32 உயிர்வாயு இயந்திரங்கள்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு மேலும் 32 உயிர்வாயு (ஒக்சிசன்) தயாரிக்கும் இயந்திரங்களை பிரதமரின் நிதியில் இருந்து வழங்குவதற்கு மத்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

இப்பிரதேசங்களில் கொவிட் - 19 தொற்றைக் கையாளவும் பரவுவதைத் தடுக்கவும் எல்லா மருத்துவ மனைகளுக்கும் சமூக நிலையங்களுக்கும் உயிர்வாயு தயாரிப்பு இயந்திரங்கள் அவசியம் என ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் மத்திய அரசை கேட்டுக் கொண்டதையடுத்தே இவ்வியந்திரங்களை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 37 பெரிய மருத்துவமனைகளில் உயிர்வாயு தயாரிப்பு இயந்திரங்கள் உள்ளன. மொத்தமாக 84 இயந்திரங்கள் அவசியம் எனக் கருதப்படுகிறது.

ஜம்முவிலும் காஷ்மீரிலும் தலா 15 இயந்திரங்கள் உலக வங்கி நிதியுதவியுடன் நிறுவப்பட்டுள்ளன. அனைத்து உயிர் வாயு தயாரிப்பு இயந்திரங்களும் நிறுவப்பட்ட பின்னர் அதன் எண்ணிக்கை 146 ஆக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Wed, 06/23/2021 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை