பலூசிஸ்தானின் எட்டு பாடசாலைகளுக்கு பூட்டு

ஈரானிய கல்வியை புகட்டுவதாக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாநிலத்தில் ஈரானிய உதவியுடன் நடத்தப்பட்டு வந்த எட்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் கல்வித் திட்டத்துக்கு பதிலாக ஈரானிய கல்வித் திட்டத்தின் கீழ் பாடங்கள் போதிக்கப்படுவதாகவும், ஈரானிய வரலாறு, அந்நாட்டின் சமூகவியல், புவியியல் என்பன பாடங்களாக காணப்படுவதுடன் பாடப்புத்தகங்கள் அனைத்தும் ஈரானிய மொழியிலேயே எழுதப்பட்டிருப்பதாகவும் இவை மூடப்பட்டமைக்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளன.

பலூச்சி மாநில தலைநகரான குவேட்டாவில் இவை அமைந்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ள நகரின் உதவி ஆணையாளர் ஸொஹயிப் அல்ஹக், இப்பாடசாலைகள் சட்டபூர்வமானவை அல்லவென்றும் பதிவுசெய்யப்படாமல் இயங்கி வந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் மிகப் பெரிய மாநிலமாக பலூசிஸ்தான் காணப்பட்டாலும், புவி அமைப்பு, குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மக்கள் செறிந்து வாழ்கின்றமை, குறைவான சனத்தொகை போன்ற காரணங்களினால் மாகாண நிர்வாகத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன.

Wed, 06/23/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை