மாத்தளை மாவட்டம்; பசளை இன்மையால் வெங்காய உற்பத்தி பாதிப்பு

மாத்தளை மாவட்டத்தில் இரசாயன பசளை இறக்குமதி தடை காரணமாக பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.  

குறிப்பாக மாத்தளை மாவட்டத்தில் நாவுல பிரதேசத்தில் பெரிய வெங்காய உற்பத்தியை மேற்கொண்ட விவசாயிகள் காலத்திற்கு ஏற்ற இரசாயன பசளைகளை இட முடியாத நிலையில் தாம் பல்வேறு இன்னல்களுக்கு முகம் ெகாடுத்துள்ளனர்.

பெரிய வெங்காய விதைகளை நட்டு 45 நாட்களில் பசளையிட வேண்டும். தற்போது பிரதேசத்திற்கு போதிய மழை வீழ்ச்சி கிடைத்த போதும் பசளை இடப்படாமையால் தாம் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள்  தெரிவிக்கின்றனர். போதியளவு பசளை வெளிச்சந்தையில் இருப்பதாக செய்திகள் தெரிவித்தபோதும் அவ்வாறு பசளையை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நூற்றுக்கணக்கான விவசாயிகளின் பல ஏக்கர் காணிகளில் பயிரிடப்பட்ட பெரிய வெங்காய செய்கை பாதிப்படைந்துள்ளதாக அவர்கள்  மேலும் தெரிவிக்கின்றனர்.  

Fri, 06/18/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை