ரயில் தண்டவாளத்தில் இராணுவ தளவாடங்கள்

போக்குவரத்து சோதனையில் இராணுவம் வெற்றி

இந்திய பாதுகாப்பு படைகளின் தயார்நிலையை அதிகரிக்க வழிவகுக்கும் முதல் நடவடிக்கையாக, சரக்கு ரயில் வழித்தடத்தில் ராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்லும் சோதனையில் இந்திய ராணுவம் வெற்றி கண்டுள்ளது.  

சரக்குப் போக்குவரத்தை விரைவில் மேற்கொள்ள பிரத்தியேக சரக்கு வழித்தடத்தை இந்திய ரயில்வே சமீபத்தில் உருவாக்கியது. பாதுகாப்பு படைகளின் போக்குவரத்து திறனை அதிகரிக்க, பிரத்யேக சரக்கு ரயில் வழித்தட கார்ப்பரேஷன், இந்திய ரயில்வே மற்றும் இந்திய ராணுவத்துக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த சரக்கு ரயில் வழித்தடத்தில், நியூ ரெவாரியிலிருந்து, நியூ புலேரா வரை ராணுவ வாகனங்கள் மற்றும் தளவாடங்களை ரயிலில் ஏற்றி இந்திய ராணுவம் பரிசோதனை மேற்கொண்டது. இது வெற்றிகரமாக நடந்து முடிந்தது.  

இதன் மூலம், இந்திய பாதுகாப்பு படைகளின் போக்குவரத்தில், பிரத்யேக சரக்கு ரயில் பாதை மற்றும் அதன் துணை கட்டமைப்பின் பயன்பாட்டை அதிகரிக்க உதவும். மேலும், பாதுகாப்பு படைகளின் போக்குவரத்துக்கு உதவ சில இடங்களில் கட்டமைப்புகளை மேம்படுத்தி, ராணுவ ரயில் போக்குவரத்து சேவைகளுக்கான நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.  

'இந்தப் பரிசோதனைகள், பாதுகாப்பு படைகளின் தயார்நிலையை அதிகரிக்க வழிவகுக்கும் முதல் நடவடிக்கை. இந்த முன்முயற்சி, திட்டமிடல் காலத்திலேயே, நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில், ராணுவத் தேவைகளும் இணைந்துள்ளதை உறுதி செய்வதற்கான நடைமுறையை ஏற்படுத்தும்' என, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.   

Thu, 06/17/2021 - 14:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை