ஜப்பானில் மாபெரும் பௌத்தப் பெண் கடவுள் சிலைக்கு முகக்கவசம்

நோய்த்தொற்றை முடிவுக்குக் கொண்டுவரப் பிரார்த்தனை

ஜப்பானில் மாபெரும் பௌத்தப் பெண் கடவுள் சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 நோய்த்தொற்றை முடிவுக்குக் கொண்டு வரப் பிரார்த்தனை செய்யும் நோக்கில் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஃபுக்குஷிமா பகுதியில் உள்ள Houkokuji Aizu Betsuin கோவிலில் கருணை தேவியாக வழிபடப்படும் Kannon கடவுள் சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டது.

57 மீற்றர் உயரம் கொண்ட அந்தச் சிலைக்கு முகக்கவசம் அணிவிக்க சுமார் மூன்று மணி நேரம் தேவைப்பட்டது.

அந்தப் பணியை 4 ஊழியர்கள் செய்தனர்.

முகக்கவசத்தின் எடை 35 கிலோகிராம்.

இளஞ்சிவப்பு நிறத்திலான அந்த முகக்கவசம் 4.1 மீ்ற்றர் நீளம் 5.3 மீற்றர் அகலம்.

ஜப்பானில் COVID-19 நோய்த்தொற்று முடிவுக்கு வரும் வரை அந்த முகக்கவசம் சிலையிலேயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

33 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்தச் சிலையிடம், கர்ப்பிணிகள், குழந்தைகள் நல்லவிதமாகப் பிறப்பதற்கும், அதன் பிறகு நன்றாக வளர்வதற்கும் பிரார்த்திப்பார்கள்.

Sat, 06/19/2021 - 09:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை