166 நாட்களில் 20 இலட்சம் பேர் பலி; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா பாதிப்புக்கு உலக அளவில் கடந்த 166 நாட்களில் 20 இலட்சம் பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.

உலக நாடுகளில் பல்வேறு அலைகளில் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்ட சூழலில், சர்வதேச அளவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 40 இலட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்கள் தற்காத்து கொள்வதற்கு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோன்று கொரோனா தடுப்பூசிகளையும் பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் புதிய பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் சூழலில், பல்வேறு நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறையும் காணப்படுகிறது. இதனால் பாதிப்பு அதிகரிக்க கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்புகளால் 20 லட்சம் பேரின் உயிரிழப்பு ஏற்படுவதற்கு ஓராண்டு எடுத்து கொண்ட நிலையில், அடுத்த 20 லட்சம் பேர் கடந்த 166 நாட்களில் உயிரிழந்த உள்ளனர் என ஆய்வொன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அவற்றில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் மெக்சிகோ ஆகிய 5 நாடுகள் உலக அளவில் 50% உயிரிழப்புகளை கொண்டுள்ளன என்றும் ஆய்வு தெரிவிக்கின்றது.

 

Sat, 06/19/2021 - 07:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை