அமைச்சர் பந்துல நேற்று மட்டக்களப்பு விஜயம்

'ரஜவாச' தொடர்பாக விரிவாக ஆராய்வு

வர்த்தக வாணிப்பத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று (16) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். இதன்போது கள்ளியன்காடு உணவு களஞ்சியசாலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நன்மை கருதி அமையப்பெறவுள்ள ÒரஜவாசÓ பல்பொருள் விற்பனை நிலையம் தொடர்பாக அமைச்சரினால் விரிவாக ஆராயப்பட்டதுடன், நிவர்த்திக்கப்பட வேண்டிய குறைபாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.

இந்த களவிஜயத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், வர்த்தக வாணிப அமைச்சின் உணவு ஆணையாளர் ஜே.கிறிஸ்ணமூர்த்தி, சதோச நிறுவனத்தின் தலைவர் ஆனந்த பீரீஸ்,வர்த்தக வாணிப வர்த்தக அமைச்சின் உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பெரியபோரதீவு தினகரன் நிருபர்

Thu, 06/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை