விளையாட்டுத் துறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மகேஷ் அபேரத்னவுக்கு மேஜர் ஜெனரல் பதவி

தேசிய இராணுவ விளையாட்டுத்துறையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுவரும் மகேஷ் அபேவர்தன அவரது பணிகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

கரப்பந்தாட்ட வீரர், பயிற்சியாளர், முகாமைத்துவ மற்றும் புகழ்பெற்ற நிர்வாகியாக இலங்கை கரப்பந்தாட்ட வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்துள்ள மேஜர் ஜெனரல் மகேஷ் அபேரத்னவுக்கு இராணுவ தளபதியால் புதிய பதவிக்குரிய இலட்சினை அணிவிக்கப்பட்டது. அங்கு இராணுவத்தின் கரப்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க இராணுவத் தளபதி இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளன குழுத் தலைவர் பதவியை வகிக்கும் அபேரத்னவிடம் ஆலோசனை வழங்கினார்.

பாடசாலை நாட்கள் தடகள போட்டிகளில் திறமையாக விளையாடிய அவர் சீனாவில் நடைபெற்ற 20ஆவது ஆசிய பிரபலமானவர்களின் தடகள போட்டியில் சுத்தியல் எறியும் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். கரப்பந்தாட்ட போட்டிகளில் திறமையாக விளையாடி இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில் இடம் பிடித்ததோடு அவர் இலங்கை இராணுவத்தின் கரப்பந்தாட்ட அணியின் தலைவராக இருந்த வேளையில் 1994 ஆம் ஆண்டு இராணுவ அணிக்கு வெற்றியையும் பெற்றுக் கொடுத்திருந்தார்.

விளையாட்டு வீரராக மட்டுமல்ல சர்வதேச கரப்பந்தாட்ட பயிற்சியாளர் பாடநெறி 1,2,மற்றும் 3 ல் சித்தி பெற்றமை, சர்வதே கடற்கரை கரப்பந்தாட்ட பயிற்சியாளர்( உயர்) பாடநெறி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழுவால் வழங்கப்படும் ஹங்கேரிய உடற்பயிற்சி கல்வி பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பாடநெறி உள்ளிட்ட 3 பாடநெறிகளை பயின்றுள்ள பயிற்சியாளரும் ஆவார். அத்துடன் கரப்பந்தாட்டம், தடகள போட்டிகள்.டென்னிஸ், பாட்மின்டன், ஸ்கொச் போன்ற விளையாட்டுக்களை பிரதிநிதித்துவம் செய்து சர்வதேச மட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதோடு அவ் 5 போட்டிகளுக்கான விளையாட்டு வண்ணங்களையும் பெற்றுள்ளார்.

விளையாட்டுத்துறை நிர்வாகியாக விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் நடவடிக்கையில் ஈடுபட்ட மகேஷ் அபேரத்ன பொதுச் செயலாளர் ( இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம்), தலைவர்( இலங்கையின் கரப்பந்தாட்ட தெரிவுக்குழு), தேசிய ஒலிம்பிக் குழு நிறைவேற்று அங்கத்தவர்(2000- 2004)என பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததோடு பாதுகாப்பு சேவை மற்றும் இராணுவ விளையாட்டு குழுக்கள் பலவற்றில் தலைவராகவும் உப தலைவராகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். .

விளையாட்டுத் துறை மற்றும் விளையாட்டுத்துறை நடவடிக்கைகளில் காட்டிய திறமை காரணமாக இராணுவ அதிகாரி ஒருவருக்கு தனது பணி காலத்தில் கிடைக்கக்கூடிய கௌரவமிக்க பதக்கமான ரணசூர பதக்கமும் மகேஷ் அபேரத்னவுக்கு கிடைத்துள்ளது.

Tue, 06/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை