கொரோனா ஒழிப்புக்கு அமெரிக்கா வழங்கும் மகத்தான உதவிகள்

சிறப்பு விமானம் மூலம் நேற்று வந்தடைவு

 

அமெரிக்கா ஒரு தொகை மருத்துவ உபகரணங்களை நேற்று முன்தினம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த இலங்கை மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கான ஒரு பங்களிப்பாக அமெரிக்கா இந்த உதவியை செய்துள்ளது. அமெரிக்க மக்களால் வழங்கப்பட்ட 120 கோடி ரூபாய்கள் பெறுமதியான முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள்,கோரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைக் கருவிகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் முகவர் நிலையத்தினால் சிறப்பு விமானத்தினூடாக நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அமெரிக்காவின் இந்த உதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றிகளை தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 06/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை