கொக்கட்டிச்சோலை கசிப்பு உற்பத்தி

நிலையம் முற்றுகை

கொக்கட்டிச்சோலை, சிறையாத்தீவு களப்பு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை சனிக்கிழமை மாலை முற்றுகையிடப்பட்டு கசிப்பு உற்பத்தி   பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொக்கட்டிச்சோலை இராணுவப்புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து இராணுவப்புலனாய்வு பிரிவினரும், முதலைக்குடா கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 9 பறல்கள், ஒரு சிலிண்டர், இரண்டு கேன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சுற்றிவளைப்பின் போது எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்த கசிப்பு உற்பத்தி நிலையமானது ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள களப்பு பகுதியிலேயே இயங்கி வந்துள்ளமையுடன், தோணியில் பயணித்தே இந்நிலையத்தினை முற்றுகையிட்டுள்ளனர்.

Mon, 06/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை