பால்மா விலையை அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரிக்கை

பால் மா வகைகளின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு பால் மா இறக்குமதியாளர்கள் கோரியுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.

400 கிராம் பால் மா பாக்கெட் ஒன்றின் விலையை 135 ரூபாவால் அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. பால்மா உட்பட இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை இதுவரை எந்தமுடிவையும் எடுக்கவில்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து சில உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(பா)

Fri, 06/18/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை