அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியம்; 17 ஆண்டு ஆகாயப் போக்குவரத்து வர்த்தகப் பூசல் முடிவு

அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே 17 ஆண்டுகளாய் நீடித்த ஆகாயப் போக்குவரத்து வர்த்தகப் பூசல் முடிவுக்கு வந்துள்ளது.

முன்னைய டிரம்ப் நிர்வாகம் ஐரோப்பாவின் Airbus விமான நிறுவனத்திற்குக் கூடுதல் வரிகளை விதித்திருந்தது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த வரிகளை அகற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் Boeing விமான நிறுவனத்திற்கு வழங்கப்படும் அரசாங்க நிதியுதவியும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

அதேபோல், Airbus விமான நிறுவனத்திற்கான அரசாங்க நிதியுதவியைத் தற்காலிகமாக நிறுத்த ஐரோப்பிய ஒன்றியமும் இணங்கியுள்ளது. அமெரிக்க - ஐரோப்பிய ஒன்றிய உச்சநிலை மாநாட்டின்போது அமெரிக்க அதிபரும் ஐரோப்பியத் தலைவர்களும் அந்தக் கருத்திணக்கத்தை எட்டினர். ஆகாயப் போக்குவரத்துத் துறையில் சீனா அளித்துவரும் போட்டியை எதிர்கொள்வதில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது அவர்களின் நோக்கம்.

Thu, 06/17/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை