தடுப்பூசி திட்டம் மேலும் 13 மாவட்டங்களில் ஆரம்பம்

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

தடுப்பூசி போடும் திட்டம் மேலும் 13 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

தற்போது மாவட்ட மட்டத்தில் வகைப்படுத்தவும் இத்திட்டத்துக்காக சைனோபாம் தடுப்பூசிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்று மாத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, பொலன்னறுவை, குருநாகல், புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு தலா 25,000 டோஸ் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது.

மேலும் நுவரெலியா, அம்பாந்தோட்டை, அனுராதபுரம், பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு 50,000 டோஸ் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை தடுப்பூசி திட்டம் அரசியல்மயமாக்கப்படாது மேற்கொள்ளப்படவும் நாட்டிலுள்ள அனைவருக்கும் கூடிய விரைவில் தடுப்பூசி போடுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Tue, 06/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை