தட்டுப்பாடு நிலவும் நாடுகளுக்கு மேலதிக தடுப்பூசிகளை வழங்குங்கள்

செல்வந்த நாடுகளுக்கு யுனிசெப் கோரிக்கை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிலிருந்து மீள்வதற்கு உள்ள ஒரே வழி, நோயை இனங்காணுதலும் சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்கலுமாகும் என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹென்றிரா போர், உலக நாடுகள் சிலவற்றில் மேலதிகமாகவுள்ள தடுப்பூசிகளை தேவைப்படும் ஏனைய நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குவதற்கான காலம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்தியாவின் மோசமான நிலைமையே சிக்கலுக்கான காரணம். அதனால், தேவையான தடுப்பூசிகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்திற்குள் கொவெக்ஸ் மூலம் 170 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கவேண்டிய நிலையில் 65 மில்லியன் தடுப்பூசிகளை மட்டுமே விநியோகிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மே மாதத்திற்குள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு 140 மில்லியன் தடுப்பூசிகளை பகிர்ந்தளிப்பதற்கு எதிர்பார்த்திருந்த நிலையில் இந்தியாவின் தற்போதைய மோசமான நிலை காரணமாக எதிர்பார்த்த வகையில் அதனை நிறைவேற்ற முடியாமலுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க எதிர்வரும் ஜுலை மாதத்தில் 50 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கமுடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள "ஜீ 7" அரச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அதன்போது இதற்கு முக்கியத்துவமளித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

தற்போது உலக நாடுகள் சிலவற்றில் மேலதிகமாகவுள்ள தடுப்பூசிகளை தேவைப்படும் ஏனைய நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குவதற்கான காலம் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 153 மில்லியன் தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் தேசிய குழு மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள airfinity the life sciences ஆராய்ச்சி மத்திய நிலையம் மேற்கொண்டுள்ள ஆய்வின்படி ஜீ 7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடுகள் தம்மிடமுள்ள தடுப்பூசி கையிருப்புகளிலிருந்து 20 வீதத்தை தடுப்பூசி தட்டுப்பாடான நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குமானால் தட்டுப்பாடாகவுள்ள 153 மில்லியன் தடுப்பூசிகளை விநியோகிப்பது கஷ்டமாக அமையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நூற்றுக்கு 20 வீதமான தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவதனால் அந்த நாடுகளின் தடுப்பூசி வேலைத்திட்டம் எந்தவகையிலும் பாதிப்படையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

Tue, 05/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை