ரிஷாட், பிரேமலால் பங்கேற்க அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோரை பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதியளித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு நடைபெறவுள்ளன.

இந்த நிலையிலேயே, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகியோருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சபை அமர்வுகளுக்கு வர விரும்பினால் அவரை அழைத்து வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரை கேட்டுள்ளாரென பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேபோல் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சபைக்கு வர விரும்பினால் அவரை அழைத்து வருவதற்கான வசதிகளை செய்து கொடுக்குமாறு படைக்கள சேவிதர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தை கேட்டுள்ளாரென்றும் அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Tue, 05/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை