பாகிஸ்தான் பொலிஸின் சட்ட ஒழுங்கு பிரிவை பலப்படுத்த பரிந்துரை

பாகிஸ்தான் தலைநகர பொலிஸாரின் சட்ட ஒழுங்கு பிரிவை துருக்கி கலகமடக்கும் படையின் வடிவத்தில் பலப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினர் குறிப்பாக சீனா தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக 2019 ஆம் ஆண்டு சட்ட ஒழுங்கு பிரிவு நிறுவப்பட்டது. இதன்மூலம் நகரில் சட்ட ஒழுங்கை பேண 3,000 அதிகாரிகள் நிறுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சு மற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த பிரிவை துருக்கி வடிவத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தலைநகரில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஏனைய சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் நிலையில் அதனை கையாள்வதற்கு போதிய ஆட்பலம் இல்லை என்று கூறப்படுகிறது.

Thu, 05/20/2021 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை