நிந்தவூரில் வியாபார நிலையம் தீக்கிரை; பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் நாசம்

நிந்தவூரில் வியாபார நிலையம் தீக்கிரை; பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் நாசம்-Shop Fire-Nintavur

- சிலிண்டர்கள் வெடிப்பு

நிந்தவூர் பிரதேசத்தில் வியாபார நிலையமொன்றில் ஏற்பட்ட தீ காரணமாக, பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் நாசமடைந்துள்ளது.

நிந்தவூர் 9ஆம் பிரிவு எஸ்.எம். ஜெமீல் என்பவருக்குச் சொந்தமான கட்டட பொருட்கள் (Hardware) விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் மற்றும் அருகில் இருந்த மரத்தளபாட வேலைத்தளம் என்பன நேற்று (14) இரவு 8.00 மணியளவில் தீக்கிரையாகி உள்ளதுடன் பல இலட்சம் பெறுமதியான வியாபார பொருட்களும் சேதமாகியுள்ளது.

நிந்தவூரில் வியாபார நிலையம் தீக்கிரை; பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் நாசம்-Shop Fire-Nintavur

குறித்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 15இற்கும் அதிகமான சமையல் எரிவாயு சிலிண்டர்களில் சில சிலிண்டர்கள் வெடித்ததினால், நிமிடத்திற்கு நிமிடம் பெரும் தீச்சுவாலைகள் தோன்றியதுடன், அந்த கடையின் அருகாமையில் வசித்து வந்த பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

நிந்தவூரில் வியாபார நிலையம் தீக்கிரை; பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் நாசம்-Shop Fire-Nintavur

இந்நிலையில் உடனடியாகச் செயற்பட்ட இலங்கை மின்சார சபையினர் அந்தப் பகுதிக்கான மின்சாரத்தினை துண்டித்திருந்ததுடன், கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் உடன் விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை குறிப்பிட்ட வியாபார நிறுவனத்தின் உரிமையாளர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

தான் மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இந்த வியாபார நிலையத்தை திறந்ததாகவும், இந்தப் பகுதி மக்கள் தன்னுடைய வியாபார நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்ததாகவும் இந்நிலையிலேயெ இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

நிந்தவூரில் வியாபார நிலையம் தீக்கிரை; பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் நாசம்-Shop Fire-Nintavur

மின்னொழுக்குக் காரணமாகவே இந்த தீ ஏற்பட்டிருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

(நிந்தவூர் குறூப் நிருபர் - சுலைமான் றாபி)

Sat, 05/15/2021 - 15:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை