நேபாள பிரதமராக சர்மா ஒலி நியமனம்

நேபாளத்தில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க தவறிவிட்டதால், கே.பி சர்மா ஓலியையே மீண்டும் பிரதமராக அந்நாட்டு ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி நியமித்துள்ளார்.

எனினும், அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவியேற்ற 30 நாட்களுக்குள் கே.பி. சர்மா ஓலி பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்.

முன்னதாக, நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் தலைவர் புஷ்பகமல் தாஹால் (பிரசண்டா) அரசு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால், பாராளுமன்றத்தில் சர்மா ஓலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை இழந்தது. பிரதமர் பதவியிலிருந்து சர்மா ஓலி விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, புதிய அரசை அமைப்பதற்கு எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணி வரை அந்நாட்டு ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி வாய்ப்பு அளித்திருந்தார்.

நேபாள பாராளுமன்றத்தில் ஆளும் சர்மா ஒலியின் கட்சிக்கு 121 எம்.பிக்களும், நேபாள காங்கிரஸ் கட்சிக்கு 61 எம்.பிக்களும், நேபாள கம்யூனிஸ்ட்- மாவோயிஸ்ட் மையம் கட்சிக்கு 49 எம்.பிக்களும், நேபாள ஜனதா சமாஜவாதி கட்சிக்கு 32 எம்.பி.க்களும் உள்ளனர்.

 

Sat, 05/15/2021 - 15:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை