போக்குவரத்து தண்டப்பணத்தை செலுத்த சலுகைக் காலம்

போக்குவரத்து தண்டப்பணத்தை செலுத்த சலுகைக் காலம்-Grace Period for Traffic Fine Payment-Until Further Notice

பொலிஸாரால் வழங்கப்பட்ட போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராத சீட்டுகளுக்கான, தண்டப்பணத்தை மேலதிக அபராதத் தொகையின்றி செலுத்துவதற்கு சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தபால் மாஅதிபர், ரஞ்சித் ஆரியரத்ன விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சலுகைக் காலம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமை, 2021 ஏப்ரல் 05 இற்கு பின் அவ்வாறு வழங்கப்பட்டுள்ள, போக்குவரத்து அபராதச் சீட்டுகளுக்கான தண்டப்பணத்தை, 14 நாட்க்ள் காலம் கடந்து செலுத்துவதன் காரணமாக, மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தின் 215 அ பிரிவிற்கு அமைய, அறவிடப்படும் மேலதிக அபராதத் தொகையின்றி செலுத்த முடியுமென அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், நிதியமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், குறித்த தண்டப்பணத்தை எந்தவொரு தபாலகங்கள், உப தபாலகங்களிலும் செலுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Sat, 05/22/2021 - 18:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை