சீரற்ற காலநிலை; பல இடங்களில் பாரிய மழை; கடலுக்கு செல்ல வேண்டாம்!

சீரற்ற காலநிலை; பல இடங்களில் பாரிய மழை; கடலுக்கு செல்ல வேண்டாம்!-Inclement Whether-Advice for Fishing-Naval Communities

- நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைகொள்கிறது

நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக மேல், சப்ரகமுவா மாகாணங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை பதிவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக, மறுஅறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள கடற் பிரதேசங்களில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்தியவங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலை, படிபடியாக நாளை (23) வலுவடைந்து மே 24ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதால், மறு அறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கிழக்கு - மத்திய வங்காள விரிகுடாவிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் (12N – 20N, 85E – 100E) இன்றிலிருந்து (22) மறு அறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

எனவே தற்போது கடலுக்கு சென்றுள்ளவர்கள், மிக விரைவாக கரையை நோக்கி திரும்புமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Sat, 05/22/2021 - 17:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை