கந்தளாய் பள்ளிவாசல்களால் இரு சலவை இயந்திரங்கள் கையளிப்பு

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் அனைத்து பள்ளிவாசல்களின் ஒன்றியத்தினால் கொரோனா தொற்றுக்குள்ளானோரின்  தேவைகளுக்காக இரண்டு துணி சலவை செய்யும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் தள வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,  வைத்தியசாலையின் பணிப்பாளரினால் கந்தளாய் அனைத்து பள்ளிவாசல்களின் ஒன்றியத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க தொன்னூற்றி ஐந்தாயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு துணி சலவை  இயந்திரங்களை, கந்தளாய் இலாஹிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து கந்தளாய் தள வைத்தியசாலை பணிப்பாளர் ஜி.எஸ்.கொஸ்தாவிடம் சனிக்கிழமை (29)  உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது கந்தளாய் தள  வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜி.எஸ்.கொஸ்தா,  பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம். சமன், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா கந்தளாய் கிளை தலைவர் மௌலவி இன்ஷாப், கந்தளாய் பிரதேச பள்ளிவாசல் சம்மேளன தலைவர், கந்தளாய் பிரதேச பள்ளிவாசல் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கந்தளாய் தினகரன் நிருபர் 

Mon, 05/31/2021 - 14:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை